கிருஷ்ணகிரியில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதி கோர விபத்து - இளைஞர் பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையின் எதிர்திசையில் வந்த கார் மீது அந்த லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜி (25) என்பவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
