கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு!
Aug 26, 2026, 10:40 IST
விழுப்புரம் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது 40 வயது நபர் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே அமைந்துள்ள சாலாமேடு மைதானத்தில், அஜிஸ்கான் எனும் 40 வயதுடைய நபர், தனது நண்பர்களுடன் ஆர்வமாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, அஜிஸ்கான் எதிர்பாராதவிதமாக மைதானத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார்.

மைதானத்திலேயே சுருண்டு விழுந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாடிக்கொண்டிருந்த போதே நண்பர்களின் கண்ணெதிரிலேயே துடிதுடிக்க உயிரிழந்த இந்த சம்பவம், சக வீரர்களையும் அப்பகுதி மக்களையும் உலுக்கியுள்ளது.
