கிரிக்கெட் விளையாடியபோது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

 
மைதானத்திலேயே மாரடைப்பு சுருண்டு விழுந்து

இலங்கையில் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் போது, விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழைய மாணவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கிரிக்கெட் போட்டியில், அந்த 46 வயது நபர் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடியுள்ளார். ஆட்டத்தின் போது அவர் பேட்டிங் செய்துகொண்டிருந்த தருணத்தில், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

மைதானத்திலேயே மாரடைப்பு சுருண்டு விழுந்து

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் மற்றும் மைதானத்தில் இருந்தவர்கள், அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

விளையாட்டு மைதானத்தில் மகிழ்ச்சியாகத் தொடங்கிய போட்டி, முன்னாள் மாணவர் ஒருவரின் திடீர் மரணத்தால் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் முடிவடைந்தது. சமீபகாலமாக விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளின் போது இதுபோன்ற திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.