கஞ்சாவை கடத்தி வந்த போது சிக்கிய இளைஞர்கள்.. போலீசை கல்லால் தாக்கிய பகீர் சம்பவம்!

நேற்று இரவு, தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில், சென்ட்ரல் சாணிகுளம் அருகே மெதுவாக நகர்ந்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது, ரயிலில் இருந்து இறங்கிய இரண்டு இளைஞர்கள் தப்பி ஓட முயன்றனர். அப்போது, அப்பகுதியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்றனர்.
ஆனால், இளைஞர்கள் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரை கற்களால் தாக்கி தப்பிக்க முயன்றனர். இதில், ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் வேலனுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. அதன் பிறகு, போலீசாரும், மத்திய ரயில்வே போலீசாரும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்த ஆலன் (21) மற்றும் அஸ்வின் (22) என்றும், அவர்கள் ஆந்திராவின் விஜயநகரம் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கியது என்றும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் மத்திய ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!