தெஹ்ரானில் சிறைக்குள் டிரம்ப் வேடமணிந்த நபர்... ஈரானின் சர்ச்சை வீடியோ!
ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான காட்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
A Trump impersonator is dancing in a mock jail cell above a busy Tehran square, part of Iran’s latest propaganda campaign against the U.S. president. The masked actor rattles bars, naps and performs Trump’s signature Y.M.C.A. dance while a billboard behind him displays images of a deadly strike on an Iranian wedding they blame on the U.S.. Unveiled Tuesday in the capital's Tajrish Square, the installation has drawn crowds filming, laughing and honking.
— Mosheh Oinounou (@Mosheh) October 23, 2026
அங்குள்ள தஜ்ரிஷ் சதுக்கத்தில், சிறைச்சாலை போன்ற கூண்டுக்குள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைப் போன்ற தோற்றத்தில் வேடமணிந்த நபர் ஒருவர் இருப்பதுபோன்ற முப்பரிமாணக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் பொதுமக்கள் அங்கு நின்று புகைப்படங்களும் எடுத்து வருகின்றனர்.
ஈரான் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையிலான அரசியல் செய்தியுடன் இந்தக் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெஹ்ரான் நகராட்சி அமைப்பின் பிரசார முயற்சியின் ஒரு பகுதியாக இது உருவாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் காட்சி இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் சூழலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
