தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கவில்லை!

 
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிவிஜய் விஜய்ரேவந்த்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம்/கோவளத்தில் நடைபெறும் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமித்ஷாவிஜய் அமித்ஷா விஜய் ஷா

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அரசு சார்ந்த பயணமாக லண்டன் மற்றும் அமெரிக்கா செல்லவுள்ளதால், அவருக்குப் பதிலாகத் தெலங்கானா துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா இம்மாநாட்டில் பங்கேற்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், ஆந்திர முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.