3 ஆண்டுகளாகச் சேமித்த ரூ.10 நாணயங்கள்! ரூ.1.23 லட்சத்துக்கு இருசக்கர வாகனம் வாங்கிய நபர்... வைரல் வீடியோ!

 
பைக்

 

 

 

தெலங்கானா மாநிலத்தில், கடந்த 3 ஆண்டுகளாகச் சேமித்து வைத்திருந்த ரூ.10 நாணயங்களைக் கொடுத்து ஒருவர் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லக்ஸெட்டிபேட்டையைச் சேர்ந்த 51 வயது நபர், ரூ.1.23 லட்சம் மதிப்புள்ள வாகனத்துக்கான முழுத் தொகையையும் ரூ.10 நாணயங்களாகவே ஷோரூமில் செலுத்தியுள்ளார்.

நாணயங்களைக் கண்டு வியந்த ஷோரூம் ஊழியர்கள்

மூன்று ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்த நாணயங்களை எடுத்துக்கொண்டு அவர் வாகன ஷோரூமுக்குச் சென்றுள்ளார். ரூ.10 நாணயங்களாகவே முழுப் பணத்தையும் அவர் வழங்கியதால், அவற்றை எண்ணி சரிபார்க்க வேண்டியிருந்தது. இந்த வித்தியாசமான முறையில் வாகனம் வாங்கிய சம்பவம் ஷோரூம் ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியது.

சமூக வலைதளங்களில் வைரல்

Telangana man buys scooty by paying 12,300 coins of Rs 10 which he saved over three years, staff spends 2 hours counting them - The Economic Times

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சிறு தொகையாக இருந்தாலும் தொடர்ந்து சேமித்தால் பெரிய பொருளை வாங்க முடியும் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.