5 மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்த 2 குழந்தைகளின் தாய்... அதிர்ச்சி வீடியோ!

 
5

 

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக ஐந்து மாடிக் கட்டிடத்தில் இருந்து பெண் ஒருவர் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மல் மாவட்டம் சாரங்காபூர் மண்டலம் லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவல்லிகா என்ற சங்கீதாவுக்கு ரவி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பப் பிரச்சினை தொடர்பாக கணவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, அவர் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நிர்மல் பகுதியில் உள்ள கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பல மாடிக் கட்டிடத்தின் நான்காவது மாடிக்குச் சென்ற சங்கீதாவை, போலீசார், சகி மைய ஆலோசகர்கள் மற்றும் உறவினர்கள் கீழே இறங்குமாறு வலியுறுத்தினர். அவரது தாயாரும் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், திடீரென அவர் அங்கிருந்து கீழே குதித்தார்.

இதில் படுகாயமடைந்த அவரை முதலில் நிர்மல் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால் ஆதிலாபாத் ரிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினர். தற்போது அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக உடல் மற்றும் மனரீதியாகத் துன்புறுத்தியதாக சங்கீதாவின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்