அமெரிக்காவில் மாயமான தெலங்கானா மாணவி... 5 நாட்களாகத் தேடும் போலீசார்; பெற்றோர் தவிப்பு!

 
தெலங்கானா

 

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உயர் கல்வி பயின்று வரும் தெலங்கானாவைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் ஷப்துல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோயா ஸ்ரீஜா ரெட்டி, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் மாசசூசெட்ஸ் பாஸ்டன் கல்வி நிறுவனத்தில் முதுகலைப் படிப்பு படித்து வருகிறார். அங்கு பகுதி நேர வேலையும் செய்து வந்தார்.

கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இரவு, பாஸ்டனின் டார்செஸ்டர் பகுதியில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து நடைப்பயிற்சிக்காக வெளியே சென்ற ஸ்ரீஜா மீண்டும் திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைக்கப்பட்ட நிலையில் இருந்ததால், உடன் தங்கியவர்கள் நவம்பர் 3-ஆம் தேதி போலீசில் புகார் அளித்தனர்.

Telangana student Sreeja Koya missing in Boston since Nov 2; minister seeks MEA help - The Week

இதையடுத்து பாஸ்டன் போலீசார் நவம்பர் 4-ஆம் தேதி மாயமானோர் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு தேடுதல் பணியைத் தொடங்கினர். அவர் கடைசியாக கார்சன் கடற்கரை அல்லது ஹார்பர் பாயிண்ட் பகுதிகளில் இருந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

மாணவியை விரைவாகக் கண்டுபிடிக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாஸ்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியையும் தெலங்கானா அமைச்சர் கோரியுள்ளார். மகளைக் காணாமல் பெற்றோர் கவலையில் உள்ளனர்