அமெரிக்காவில் டிரக் மோதி தெலுங்கானா பெண் பலி! 2 வயது குழந்தையை தவிக்கவிட்டு சோகம்

 
தெலங்கானா

 

அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த 31 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மகபூபாபாத் மாவட்டம் மரிபெடா மண்டலத்தை சேர்ந்த தரம் சுப்ரியா என்பவர் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பகுதியில் வசித்து வந்தார். அங்கு உணவகம் ஒன்றை நடத்தி வந்ததாகவும், சம்பவத்தன்று இரவு பணியை முடித்துவிட்டு தோழியுடன் காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

NRIPage | Articles | Telugu Woman Dies in Missouri Crash After Truck Hits Car | Get Latest Road Accident News. Stay updated with traffic collisions, highway crash reports - NRI Page

அப்போது அவர்களது கார் மீது பின்னால் வந்த டிரக் மோதியதாக கூறப்படுகிறது. இதில் கார் கடுமையாக சேதமடைந்த நிலையில், சுப்ரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த மற்றொரு தெலுங்கானாவை சேர்ந்த பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான முழுமையான விவரங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரக் மோதிய விதம் உள்ளிட்ட விபத்தின் காரணங்கள் குறித்த மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.சுப்ரியா, சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் கொடுமுரி ரஞ்சித்தை திருமணம் செய்ததாகவும், இவர்களுக்கு இரண்டரை வயது மகன் இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுப்ரியாவின் உடலை அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வந்து இறுதிச்சடங்கு செய்வதற்கு தெலுங்கானா அரசு உதவ வேண்டும் என்று அவரது தந்தை தரம் சீனிவாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். குடும்பத்தினர் தற்போது அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து அடுத்தகட்ட தகவல்களை எதிர்பார்த்து வருகின்றனர்.