இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு திடீர் தடை... பயனர்கள் அதிர்ச்சி !

 
முடங்கிய வாட்ஸ் அப்! தட்டி தூக்கிய டெலிகிராம்! முடங்கிய வாட்ஸ் அப்! தட்டி தூக்கிய டெலிகிராம்!

மத்திய அரசு வரும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வு (NEET-UG 2026) தொடர்பான முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ஒரு புதிய முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக இந்தியாவில் பிரபல குறுஞ்செயலி நிறுவனமான டெலிகிராம் பயன்பாட்டிற்கு ஜூன் 22 வரை தற்காலிகத் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மறுதேர்வு முடியும் வரை இந்தத் தடை உத்தரவு முழுமையாக அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு குறித்த தவறான வதந்திகள் மற்றும் மோசடிகளைத் தவிர்க்கும் நோக்கில் டெலிகிராம் செயலியில் உள்ள செய்தி திருத்தும் (Message-edit) வசதியும் ஜூன் 30 வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தத் துரித நடவடிக்கை மாணவர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முறையான மற்றும் நேர்மையான முறையில் தேர்வுகள் நடப்பதை உறுதி செய்யவே இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறுதேர்வு முடிந்த பின்னர் வழக்கம் போல் இந்தச் செயலி செயல்பாட்டிற்கு வரும் என்றும் வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.