”லெஸ்பியன்னு சொல்லு கெத்தா இருக்கும்”.. சர்ச்சை கிளப்பிய மிரியம்மா ட்ரைலர்..!
Oct 20, 2023, 16:23 IST
லெஸ்பியன் சொல்லு கெத்தா இருக்கும் என்ற வசனத்தோடு மிரியம்மா பட ட்ரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அறிமுக இயக்குனர் மாலதி நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மிரியம்மா'. இப்படத்தில் ரேகா, விஜே ஆஷிக், அனிதா சம்பத் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள நீங்க ஹோமோவா, லெஸ்பியன்னு சொல்லு, கெத்தா இருக்கும்ல போன்ற வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரைலரை பார்க்கும்போது தன்பாலின காதல், பிரசவம் குறித்து பேசும் படம் போல தெரிகிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சமீப காலமாக அனைத்தையும் வெளிப்படையாக பேசி வரும் சினிமா தற்போது லெஸ்பியன் பற்றியும் விவரமாக பேசி இருப்பது அனைவரிடமும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
