தெலுங்கு வருடப்பிறப்பு, ரமலான் தொடர் விடுமுறை... தமிழகம் முழுவதும் 1,774 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - முன்பதிவு தொடக்கம்!

 
பேருந்து யுபிஐ பேருந்து யுபிஐ

தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரமலான் பண்டிகையை ஒட்டி வரும் தொடர் விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் 1,774 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று மார்ச் 18ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையின் புதிய போக்குவரத்து மையமான கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் மத்திய, மேற்கு மாவட்டங்கள்: திருச்சி, கும்பகோணம், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், ஆன்மிகத் தலங்களான திருவண்ணாமலை போன்ற இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் உண்டு.

பேருந்து

கூட்ட நெரிசலைத் தவிர்க்கப் பயணிகள் TNSTC அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் தங்களது இருக்கைகளை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். விடுமுறை முடிந்து மார்ச் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புவதற்கும் இதேபோலச் சிறப்புப் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அரசு பேருந்து

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பேருந்துகள் இயங்கும் என்பதால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லுமாறு போக்குவரத்துத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.