பிரபல நடிகர் ரகுபாபுவின் தந்தை மூத்த நடிகர் கிரிபாபு காலமானார்... திரையுலகினர் இரங்கல்!

 
தெலுங்கு

 

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், பிரபல நகைச்சுவை நடிகர் ரகுபாபுவின் தந்தையுமான கிரிபாபு (83) இன்று (நவம்பர் 14) காலமானார். அவரது மறைவு தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கிரிபாபு, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிரிபாபு, 1970-களில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்கள் என பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் புகழ்பெற்றார்.

Veteran Telugu Actor Giribabu Passes Away

நடிப்புடன் திரைப்படத் தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் ஈடுபட்டார். 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், 'சிம்ஹ கர்ஜனா', 'மெருப்பு தாடி', 'இந்திரஜித்' உள்ளிட்ட படங்களுடன் தொடர்புடையவர்.அவரது மகன் ரகுபாபுவும் தெலுங்கு திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக உள்ளார். கிரிபாபுவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.