வீட்டை விட்டு வெளியே வராதீங்க... 5 நாட்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்!

 
வெயில் மழை

 தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கம் முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கும் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஏப்ர 4ம் தேதி இன்று வியாழக்கிழமை  தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.நாளை முதல் ஏப்ரல் 7 வரை  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வெயில் மாஸ்க் மாணவிகள் இளம்பெண்கள்

ஏப்ரல் 8 முதல் 10ம் தேதி வரை  கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 4 முதல் 8 வரை  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் தினசரி வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும். அடுத்த 5 நாட்களில்  அதிகபட்ச வெப்பநிலையாக வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 39 – 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37' - 39* செல்சியஸ் மற்றும் கடலோரப் பகுதிகளில் 34” – 37° செல்சியஸ் நிலவக்கூடும். அடுத்த 5 நாட்களில்  காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும்.

வெயில்


அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக  37-38 டிகிரி செல்சியசாகவும்,  குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாகவும்  இருக்கக்கூடும். “ எனத் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web