பக்தர்களே பயன்படுத்திக்கோங்க... வெள்ளியங்கிரி மலையில் தற்காலிக மருத்துவ முகாம் திறப்பு!

 
வெள்ளியங்கிரி
 கடந்த 2 நாட்களில் வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பக்தர்கள் உயிரிழந்த நிலையில் வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம்  இணைந்து தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்துள்ளது. இந்த முகாம்களில் மருத்துவ குழுக்கள்  2 ஆக பிரிக்கப்பட்டு  24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுளது. இந்த மருத்துவக்குழு  கோயில் அடிவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.   பக்தர்கள் எந்நேரத்தில் அவசர காலங்களில் உடனடியாக மருத்துவ முகாம்களை பயன்படுத்த வனத்துறை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

 கோவை மாவட்டம்  பூண்டியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திரத்திற்காக சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் குப்பம்பட்டி ரோடு பாரதி நகர்  தியாகராஜன் மலை ஏறினார். இவருக்கு வயது 35 .இவர் மலை ஏறும் போது  நேற்று காலை மூச்சுதிணறி உயிரிழந்தார்.அதே போல் ஹைதராபாத் சென்ட்ரல் பகுதி துவாரா காலனியில் வசித்து வரும் 40 வயது சுப்பராவ்  தனது நண்பர் வெங்கட்கிரியுடன் நேற்று மலை ஏறினார்.

வெள்ளியங்கிரி மலை

அப்போது அவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு  மயக்கம் அடைந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை தேனி மாவட்டம் சி.பாளக்கோட்டை பட்டி தெருவில் வசித்து வரும் செல்போன் கடை உரிமையாளர் 40 வயது பாண்டியன் தனது நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை ஏறினார். 3வது மலையை தாண்டி வழுக்குப்பாறை அருகே செல்லும்போது, பாண்டியன் உடன் வந்தவர்களிடம் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார்.அவரை அவரது நண்பர்கள் மீட்டு அங்கிருந்த  தொழிலாளர்கள் துணையுடன் மலை அடிவாரம் கொண்டு வந்தனர்.

வெள்ளியங்கிரி மலை

அங்கு ஆம்புலன்சில் தயாராக இருந்த மருத்துவர் அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து ஆலாந்துறை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கோவில் நிர்வாகம் சார்பில் இதயம் பலவீனமாக உள்ளவர்கள், இதயத்துடிப்பு அதிகம் உள்ளவர்கள் பாதுகாப்பாக மலை ஏறவேண்டும். மலை ஏறும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web