ரூ.4.39 கோடி செலவில் மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய நடைபாதை - டெண்டர் அறிவிப்பு!

 
மெரினா நடைப்பாதை மாற்றுத்திறனாளிகள்

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த மரத்தாலான நடைபாதை பழுதடைந்ததை அடுத்து, அதற்குப் பதிலாக அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய நடைபாதை அமைக்கப்படவுள்ளது.

இனி மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் சிரமமின்றிச் சென்று கடலை ரசிக்கும் வகையில், சுமார் 4 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் புதிய நடைபாதை அமைக்கப்படவுள்ளது. முன்னதாக அமைக்கப்பட்ட நடைபாதை கடல் காற்று மற்றும் தொடர் பயன்பாடு காரணமாகச் சேதமடைந்ததை அடுத்து, தற்போது கூடுதல் பலத்துடனும் நவீன வசதிகளுடனும் புதிய பாதை வடிவமைக்கப்பட இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள்

இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை சென்னை மாநகராட்சி தற்போது கோரியுள்ளது. இந்த ஒப்பந்தப் பணிகள் இறுதி செய்யப்பட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாகப் பணிகளை விரைந்து முடித்து, மாற்றுத்திறனாளி மக்களின் பயன்பாட்டிற்குப் புதிய நடைபாதையைக் கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் தீவிரத் திட்டமிட்டுள்ளது.