எல்லையில் பதற்றம்... ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்; 8 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால் பரபரப்பு!

 
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் கடுமையான பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் சுமார் 10 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. எல்லையில் ஊடுருவ முயன்றவர்களை முறியடிக்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் எல்லை

இந்தத் தாக்குதலின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தான் தலிபான் படைகள் ஏவிய 8 ட்ரோன்களைப் பாகிஸ்தான் ராணுவம் நடுவானில் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தி அழித்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த திடீர் வான்வழித் தாக்குதல் மற்றும் ராணுவ நடவடிக்கைத் குறித்து ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அல்லது அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இதனால் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உச்சக்கட்டப் பதற்றம் நிலவி வருகிறது.