நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு... ஸ்டேஷன் மாஸ்டர் மீது கொடூரத் தாக்குதல்!

 
நெல்லை தாக்குதல் ரயில்நிலையம் ஸ்டேஷன் மாஸ்டர்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆட்டோ பெர்மிட் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், ஸ்டேஷன் மாஸ்டர் தாக்கப்பட்டுக் காயமடைந்த சம்பவம் ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்குள் புகுந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே ஆட்டோ பெர்மிட் வழங்குவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி

இந்த மோதல் முற்றிய நிலையில், ரயில் நிலையத்திற்குள் புகுந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஸ்டேஷன் மாஸ்டர் சபாபதி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவரது மண்டை உடைக்கப்பட்டுப் பலத்த காயம் ஏற்பட்டது.

ரயில் ரயில்வே நெல்லை திருநெல்வேலி தூத்துக்குடி

சக ஊழியர் மீது நடத்தப்பட்ட இந்த வெறிச்செயலைக் கண்டித்து ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் 3 ஆட்டோ ஓட்டுநர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.