சென்னையில் பதற்றம்... மயிலாப்பூரில் இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை!

 
மயிலாப்பூர் வெட்டிக் கொலை

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த இளைஞர் மயிலாப்பூரில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, மர்மக் கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சத்தியசீலன் (20) என்ற இளைஞர், நேற்று இரவு மயிலாப்பூர் வீரபத்திரன் தெருவில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய சத்தியசீலனை அவரது நண்பர்கள் உடனடியாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சேர்த்தனர். எனினும், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இக்கொலைக்கான காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும், தப்பியோடிய குற்றவாளிகள் யார் என்பது குறித்தும் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.