மதுரையில் பதற்றம்... நள்ளிரவில் குடியிருப்புப் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு!
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சோழவந்தானில் உள்ள காமராஜர் நடுநிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது இன்று அதிகாலை மர்ம நபர்கள் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீதி வீசியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், வீட்டின் சுவர்கள் மற்றும் அங்குத் தெருவில் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் இந்தத் தீ விபத்தில் சேதமடைந்தன.
நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவத்தால் அலறி அடித்து எழுந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாகத் தீயை அணைத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இப்பகுதியில் தொடர்ந்து வன்முறைச் செயல்கள் அரங்கேறி வருவது பொதுமக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
