மணிப்பூரில் பதற்றம்.. மீண்டும் கலவரம் மூளும் அபாயம் - நாகா தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி!
மணிப்பூரின் தமன்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் நாகா தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரின் தமன்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் நாகா தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நாகா ஆயுதக் குழுக்களின் தொடர் தாக்குதல்களால் இந்த ஆண்டில் மட்டும் 22 குகி பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள குகி-சோ கவுன்சில், இச்சம்பவத்திற்குத் தங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீவிரவாத ஆயுதக் குழுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மணிப்பூர் மாநிலம் மீண்டும் ஒரு தீவிரமான இனமோதலை நோக்கித் தள்ளப்படும் என்று குகி-சோ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
