சிவகங்கையில் பதற்றம்... சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்!
தமிழகத்தில் இன்று காலை சிவகங்கை மாவட்டம் காளையர் கோயில் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை வாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அடுத்த காளைக்கண்மாய் அருகே இன்று காலை போலீசார் இன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனையிட முற்பட்டனர்.

அப்போது காரில் இருந்த கச்சாநத்தத்தை சேர்ந்த ரவுடி அதிலனை சோதனையிட முற்பட்ட போது, திடீரென சப்-இன்ஸ்பெக்டர் குகனை வாளால் வெட்டிவிட்டு ரவுடி அதிலன் அங்கிருந்து தப்பியோட முயன்றான். இதையடுத்து அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஆடிவேல் துப்பாக்கியால் அதிலனின் வலது காலில் சுட்டுப் பிடித்தார்.காயமடைந்தை அதிலனையும், வாளால் வெட்டுப்பட்ட எஸ்ஐ குகனையும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ரவுடி அதிலன் வாளால் தாக்கியதில் காயமடைந்த எஸ்.ஐ., குகனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ரவுடி அதிலன் மீது 5 கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
