தூத்துக்குடியில் பதற்றம்... தேவாலய கண்காட்சியில் உணவருந்திய 60 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Updated: Sep 7, 2026, 07:47 IST
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் நடைபெற்ற தேவாலய விவிலிய கண்காட்சியில் உணவு அருந்திய 60 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலக்குறைவு உண்டாகியுள்ளது.
தருவைகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் விவிலிய கண்காட்சி நடைபெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் தாங்களாகவே வீடுகளில் தயாரித்து கொண்டுவந்து கண்காட்சியில் காட்சிப்படுத்திய உணவுகளை உட்கொண்டுள்ளனர்.

எதிர்பாராதவிதமாக அந்த உணவு விஷமானதால், அதனை உட்கொண்ட 60 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலக்குறைவு விபரீதம் ஏற்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 60 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, அரசு மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
