மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் - ஜோர்டான், UAE மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

 
ஈரான் தாக்குதல் ஜோர்டான் UAE

அமெரிக்கா தரப்பிலிருந்து ஈரானின் லாரக் தீவு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஈரான் லாரக் தீவு  அமெரிக்க  ஏவுகணைத் தாக்குதல்

ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. எனினும், ஜோர்டான் வான்பாதுகாப்புப் படைகள் உடனடியாகச் செயல்பட்டு அவற்றில் 8 ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் ஈரான் ட்ரோன்

ஜோர்டானைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தளத்தை நோக்கியும் ஈரான் டிரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தகவலள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் ஏற்பட்டு, அங்கு கடுமையான பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.