நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு - பொதுக்குழுவில் ஏகமனதாகத் தீர்மானம்!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிகாலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது தொடர்பான முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவின் பதவிகாலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாகப் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, 20.03.2025 முதல் 19.03.2028 வரையிலான காலகட்டத்திற்குத் தற்போதைய நிர்வாகமே தொடர்ந்து செயலாற்றும்.
ஏற்கனவே மேற்குறிப்பிட்ட கால நீட்டிப்புக்கான அரசு ஆணை பெறப்பட்டிருந்த நிலையில், அதற்கு நடிகர் சங்க பொதுக்குழுப் பேரவை தங்களது மறு உறுதி ஒப்புதலை அளித்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
