கோர விபத்து.. அங்கன்வாடி ஊழியர் மீது டிப்பர் லாரி ஏறி இறங்கியதில் பரிதாபமாக பலி..!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (60). இவரது மணைவி சாந்தி (51). இவர் மேச்சேரி விரப்பனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சாந்தி பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி சாந்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தடுமாறி விழுந்த சாந்தி டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிக்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேச்சேரி போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிசார் டிப்பர் ஸாரி ஒட்டுநரான பிரபாகரன் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் அங்கன்வாடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.