கோர விபத்து... அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 21 பேர் பலி... 38 பேர் கவலைக்கிடம்!

 
விபத்து

ஆப்கானிஸ்தானில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 21 பேர் பலியாகினர்.  ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் ஹெல்மண்ட் மாகாணத்தில் கெராஷ்க் மாவட்டத்தில்  நேற்று காலை  அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோரவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து துறை அதிகாரி விடுத்த செய்திக்குறிப்பில்  “பைக் ஒன்றின் மீது பயணிகள் சென்ற பேருந்து  ஒன்று மோதி கோரவிபத்து ஏற்பட்டது.  

விபத்து

இதன் பிறகு அந்த பேருந்து  எதிர் திசையில் சென்ற எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில்  பைக்கில் இருந்த 2 பேர், லாரியில் இருந்த 3 பேர் மற்றும் பேருந்தில்  பயணித்த 16 பேர் என மொத்தம் 21 பேர் பலியாகினர். மேலும்  38 பேர் காயமடைந்தனர்.  
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்தவர்கள் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விபத்து

பேருந்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முதலில் பைக் மீது தான் மோதியது. தொடர்ந்து வந்த லாரி மீதும் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர்களில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.  சமீபகாலமாக  ஆப்கானிஸ்தானில் சரியாக போடப்படாத சாலைகளின் நிலை காரணமாக அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு விடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  2022ல்  டிசம்பரில் நடந்த விபத்தில், எண்ணெய் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து, தீப்பிடித்து எரிந்ததில், 31 பேர் பலியாகினர்.   20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web