நள்ளிரவில் சோகம்.... தாறுமாறாக சென்ற பேருந்து அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் பலி, 25 பேர் படுகாயம்!

 
விபத்து


 
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் குர்லா பகுதியில் அதிவேகமாக வந்த பெஸ்ட் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் நின்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து  மோதி விபத்தை ஏற்படுத்தியது.இது குறித்து வெளியான முதல்கட்ட தகவலின்படி, குர்லாவில் இருந்து அந்தேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து அம்பேத்கர் நகரில் உள்ள புத்தர் காலனி அருகே கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.

ஆம்புலன்ஸ்

நேற்று டிசம்பர் 9ம் தேதி திங்கட்கிழமை இரவு 10.45க்கு இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.  இந்த விபத்தில், நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர். மேலும், காயமடைந்தவர்கள் பாபா மருத்துவமனை, சியோன் மருத்துவமனை மற்றும் செவன் ஹில்ஸ் மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உத்தரபிரதேச போலீஸ்


இந்த விபத்து குறித்து  பேருந்தின் ஓட்டுநர் சாரதி சஞ்சய் மோரே  கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 1ம் தேதி தான் பணியில் சேர்ந்தார். குர்லா காவல்நிலையத்தில் அவர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டு , குற்றம் சாட்டப்பட்ட டிரைவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் ஏதும் கலந்திருக்கவில்லை என உறுதி செய்யப்பட்டது.   முதற்கட்ட விசாரணையில், பிரேக் பழுதானதால் டிரைவரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்ததாகவும், இதனால் பயந்து போன டிரைவர், பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியுள்ளார்.   இதனால் பேருந்தின் வேகம் அதிகரித்தது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது .  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!