பெற்றோர்களே உஷார்... ஐஸ்கிரீம் கொடுத்து குழந்தை கடத்தல்!!

 
ஐஸ்கிரீம் கொடுத்து குழந்தை கடத்தல்
ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து குழந்தையை கடத்திச் சென்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துராஜ். இவரது மனைவி ரதி (32). இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற மகளும், ராஜசேகர், ஸ்ரீஹரிஷ் என்ர இரு மகன்களும் உள்ளனர். குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு மாலை போடுவதற்காக கடந்த 28ம்தேதி முத்துராஜ், ரதி, ஒன்றரை வயது மகன் ஸ்ரீஹரிஷ் ஆகியோர் வந்தனர். முன்னதாக திருச்செந்தூர் கோயிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்ய நினைத்து, அங்குள்ள மண்டபத்தில் தங்கியிருந்தனர்.

குலசை முத்தாரம்மன் கோவில் | Kulasekarapattinam Mutharamman Temple

அப்போது அங்கிருந்த ஒரு பெண், ரதியிடம் ‘‘நானும் குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு மாலை போடுவதற்காக வந்துள்ளேன். நான் கடற்கரைக்கு துணி வைக்க செல்கிறேன். நீயும் வருகிறாயா? என ரதியிடம் கேட்டுள்ளார். இதையடுத்து ரதி, குழந்தையையும், கணவரையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு அந்தப் பெண்ணுடன் சென்றுள்ளார். அப்போது முத்துராஜ் சோப்பு வாங்கச் செல்வதாக கூறியுள்ளார்.

அந்தப் பெண்ணும் துணி துவைப்பது போல் பாவனை செய்தார். சிறிது நேரத்தில் ஸ்ரீஹரிசுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுப்பதாகக் கூறிவிட்டு, அவனை மட்டும் அழைத்து செல்வதுபோல் கடத்தி சென்றுவிட்டார். குழந்தை கடத்தப்பட்டத்தை அறிந்த தம்பதியினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் குழந்தையை கடத்திய அந்த பெண் டூவிலரில் ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவருடன் செல்வது பதிவாகி இருந்தது. தற்போது அந்த பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

From around the web