பயங்கரம்... காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தறுப்பு: தப்ப முயன்ற காமுகனை சுட்டுப் பிடித்த போலீசார்!

 
காதலிக்க மறுப்பு காதலிக்க மறுப்பு

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஒருதலைக் காதலால் பிளஸ்-2 மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியைப் பிடிக்க முயன்றபோது அவன் போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயல, போலீசார் அவனது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.

கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் - நாகமணி தம்பதியின் 17 வயது மகள், சமீபத்தில் பிளஸ்-2 தேர்வுகளை எழுதிவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக அந்த மாணவியை ஒருதலைப்பட்சமாகக் காதலிப்பதாகக் கூறித் தொல்லை கொடுத்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்த நிலையில், மாணவி அதனைத் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

பாலியல் கொலை உல்லாசம் க்ரைம்

நேற்று முன்தினம் மாணவியின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த நேரம் பார்த்து, வெங்கடேஷ் வீட்டிற்குள் புகுந்துள்ளார். மீண்டும் திருமணத்திற்கு வற்புறுத்தியபோது மாணவி மறுக்கவே, மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டுத் தப்பியோடினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே துடித்தபடி உயிரிழந்தார்.

மாணவியின் உயிரிழப்பால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். "குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்" என முழக்கமிட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

தனிப்படை அமைத்துத் தேடி வந்த போலீசார், தலைமறைவாக இருந்த வெங்கடேசை இன்று காலை கைது செய்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக அவனை வேறு இடத்திற்கு மாற்ற முயன்றபோது, வெங்கடேஷ் திடீரென இரண்டு போலீசாரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

எச்சரித்தும் நிற்காததால், போலீசார் தற்காப்பிற்காகத் தனது துப்பாக்கியால் வெங்கடேசின் கால்களில் சுட்டனர். தற்போது காலில் குண்டடிபட்ட வெங்கடேசை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவனால் காயமடைந்த போலீசாருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.