சமயபுரம் கோவிலில் பயங்கரம்... மேற்கூரை இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழப்பு!

 
சமயபுரம் சமயபுரம்

உலகப் புகழ்பெற்ற திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழாவிற்காக வந்திருந்த பக்தர்கள் மீது கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தற்போது 4-வது வாரப் பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதற்காகத் தஞ்சாவூர் மற்றும் திருவையாறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று இரவே கோவிலுக்கு வந்துள்ளனர். ஒதிருவையாறைச் சேர்ந்த நதியா (32), அவரது உறவினர்களான ரஞ்சனி (35) மற்றும் சிறுமி பப்பிக்ஷா (14) ஆகியோர் அதிகாலை தரிசனத்திற்காகக் கோவில் சன்னதி வீதியில் உள்ள நுழைவு வாயில் மண்டபத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென அந்த மண்டபத்தின் கான்கிரீட் மேற்கூரை சுவர் இடிந்து, கீழே உறங்கிக் கொண்டிருந்த மூன்று பேர் மீதும் விழுந்தது. இந்த கோர விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய நதியா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட ரஞ்சனி மற்றும் அவரது மகள் பப்பிக்ஷா ஆகிய இருவருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் மற்றும் கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்து நடந்த கிழக்கு வாசல் பகுதி தற்போது பேரிகார்டு அமைக்கப்பட்டு முழுமையாக மூடப்பட்டுள்ளது. பக்தர்கள் வடக்கு மற்றும் தெற்கு வாசல் வழியாகக் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வெளியே செல்ல மேற்கு வாசல் பயன்படுத்தப்படுகிறது.

தற்கொலை

கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பக்தர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், விபத்து நடந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.