தமிழகத்தில் தொடரும் பயங்கரம்... திருச்சி அருகே இளம்பெண் சடலமாக மீட்பு!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கரட்டாம்பட்டி பாலத்தின் அடியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கரட்டாம்பட்டி பாலத்திற்கு அடியில் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்களுக்குத் தெரியவந்துள்ளது. உடனே அவர்கள் இதுகுறித்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற புலிவலம் காவல் நிலையப் போலீசார், பாலத்தின் அடியில் கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், குறித்த பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
