பெங்களூருவில் பயங்கரம்... நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் சடலம்!

 
இளம்பெண் சடலம் நிர்வாண இளம்பெண் சடலம் நிர்வாண

பெங்களூரு மாநகரில் பூட்டிய வீட்டிற்குள் இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க பூஜா என்ற அந்தப் பெண், பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் தங்கியிருந்த வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அந்த வீட்டிலிருந்து தாங்க முடியாத அளவிற்குத் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது உள்ளே பூஜா ரத்த வெள்ளத்தில் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலில் காயங்கள் இருந்ததால், மர்ம நபர்கள் அவரை அடித்துக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வீட்டில் இருந்த தடயங்களைச் சேகரித்தனர். பூஜாவின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர்.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

இந்தத் துணிகரக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பூஜாவின் செல்போன் அழைப்புகள் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், அவருடன் பழகியவர்கள் மற்றும் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் ஒரு பெண் தங்கியிருந்த வீட்டிலேயே கொலை செய்யப்பட்டிருப்பது பெங்களூருவில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.