அதிர்ச்சி... பட்டப்பகலில் தொழிலதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை!

 
பழனிச்சாமி

சென்னை தி.நகரை சேர்ந்த 57 வயதான பழனிச்சாமி என்பவர் தரமணி சேவ நகர், முதல் தெருவில் சென்றபோது சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மூன்று இருசக்கர வாகனத்த்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வேளச்சேரி அடுத்த தரமணி அருகே நடந்து சென்றுக் கொண்டிருந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பழனிச்சாமியை சரமாரியாக வெட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த  பழனிச்சாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ்சில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அழைத்து  செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தரமணி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்தும், எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்தும் cctv வீடியோ காட்சிகளை வைத்துதனிப்படை போலீசார் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web