பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை | முகத்தையே குறி வைத்த மர்ம கும்பல்!

 
தீன தயாள வர்மன்

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரபல ரவுடி பட்டப்பகலில் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகத்தையே குறி வைத்த கும்பல், கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கப்பிலியப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தீன தயாள வர்மன் (32). செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், இவர் மீது 2016 கொலையில் தொடர்பு மற்றும் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 25) மா.மூ கோவிலூர் அருகே உள்ள அம்மா குளக்கரையில் தீனதயாள வர்மன் பட்டப்பகலில் மர்ம ஆசாமிகளால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.இதைக்கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web