ஈரோட்டில் பயங்கரம்... தந்தைக்கு மது வாங்கி கொடுத்து 17 வயது சிறுமி பலாத்காரம்!

 
 டாஸ்மாக்  டாஸ்மாக்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே, மதுப்பழக்கத்திற்கு அடிமையான தந்தையைப் பயன்படுத்தி 17 வயது சிறுமிக்கு அவரது நண்பர்களே பாலியல் தொல்லை கொடுத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், போதைப்பழக்கம் ஒரு குடும்பத்தையே எப்படிச் சீரழிக்கும் என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் தந்தை மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தந்தையின் நண்பர்கள் மற்றும் அவருக்குத் தெரிந்த சில நபர்கள், சிறுமியின் தந்தைக்குத் தொடர்ந்து மது வாங்கி கொடுத்து, அவரைப் போதையில் இருக்கச் செய்துள்ளனர். தந்தை போதையில் இருந்த சமயங்களில், அந்தச் சிறுமிக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

இது குறித்துச் சிறுமி தனது தந்தையிடம் முறையிட்டும், மது போதையில் இருந்த அவர் இதைக் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர் சித்திரவதையால் மனமுடைந்த அந்தச் சிறுமி, கடந்த மார்ச் 31-ம் தேதி வீட்டில் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார். அருகில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்ற அவர், அங்குத் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், சிறுமி நீண்டகாலமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

பலாத்காரம் பாலியல் சிறுமி

தற்போது கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் என இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்களைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இதில் தொடர்புடையவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.