ஓசூரில் பயங்கரம்... வேலைத் தேடிவந்த வடமாநில பெண் பலாத்காரம்!

 
காடு வனப்பகுதி பலாத்காரம் தோட்டம் கொலை காடு வனப்பகுதி பலாத்காரம் தோட்டம் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், வேலை தேடி வந்த வட மாநிலப் பெண்ணை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த பால் வியாபாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சமீபத்தில் வேலை தேடி ஓசூர் வந்துள்ளார். அவர் பேகேபள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலை நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் (37) என்ற பால் வியாபாரி, அந்தப் பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்திற்கு அந்தப் பெண்ணைக் கூட்டிச் சென்ற மகேஷ், அவரைப் பலவந்தமாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், நடந்த துயரம் குறித்து ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த மகேஷை அதிரடியாகக் கைது செய்த போலீசார், அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பலாத்காரம் பாலியல் சிறுமி

வேலைக்காகத் தொலைதூர மாநிலத்திலிருந்து வந்த பெண்ணிற்கு நேர்ந்த இந்தத் துயரம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறையினர் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.