சேலத்தில் பயங்கரம்... கணவனை அடித்துக் கொன்று, உடலைக் காட்டுக்குள் புதைத்த மனைவி, மகன்!

 
ஏத்தாப்பூர் சேலம் காவல் நிலையம் கொலை

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே குடும்பத் தகராறு காரணமாகக் கூலித் தொழிலாளியை அடித்துக் கொன்று, அவரது உடலைக் காட்டுப் பகுதியில் புதைத்த மனைவி மற்றும் மகன் உள்பட 4 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் நெய்யமலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (44). இவருக்கும் இவரது மனைவி பழனியம்மாள் (40) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், பழனியம்மாள் தனது மகன் முருகனுடன் (21) தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே மாமனார் மாணிக்கத்துடன் ஏற்பட்ட மோதலில் கோவிந்தராஜ் நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் வெளியே வந்து வாழப்பாடி பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

சமீபத்தில் தனது மனைவி மற்றும் மகனை அழைக்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில், பழனியம்மாள், அவரது மகன் முருகன், தந்தை மாணிக்கம் (65) மற்றும் சகோதரர் பெரியசாமி (39) ஆகிய 4 பேரும் சேர்ந்து கோவிந்தராஜைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் பீதியடைந்த அந்த 4 பேரும் சேர்ந்து கோவிந்தராஜின் உடலை அருகிலுள்ள நெய்யமலை வனப்பகுதிக்குக் கொண்டு சென்று ரகசியமாகப் புதைத்துவிட்டுத் தலைமறைவாகினர்.

கொலை படுகொலை வெட்டிக்கொலை

கோவிந்தராஜ் வேலைக்கு வராததால் சந்தேகம் அடைந்த தோட்ட உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏத்தாப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் இக்கொலை வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் காட்டிய இடத்திலிருந்து கோவிந்தராஜின் உடலைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.