அதிகாலையில் பயங்கரம்.. பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த இருசக்கர வாகனம்.. பரிதாபமாக பலியான இளைஞர்!

 
கொலை

குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பள்ளத்தில் பைக் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார். தூத்துக்குடியை அடுத்த முத்தையாபுரம் கணேஷ் நகரை சேர்ந்தவர் வேணுகோபால் மகன் முத்துராஜா (26). இவர் புல்லாவெளியில் உள்ள உப்பள நிறுவனத்தில் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு குளத்தூரில் நடந்த பிறந்தநாள் விழாவை காண முத்துராஜா தனது நண்பர் சிவமுருகனுடன் பைக்கில் வந்துள்ளார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் முத்துராஜா பைக்கில் வீடு திரும்பினார்.


கிழக்கு கடற்கரை சாலையில் வேப்பலோடை கேட் அருகே பைக் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்ததில் முத்துராஜா தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து குளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா