விழுப்புரத்தில் பயங்கரம்... வீடுபுகுந்து அரசுப் பள்ளி ஆசிரியர் படுகொலை!

 
கொலை கொலை

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே, அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் அவரது வீட்டிற்குள்ளேயே மர்மமான முறையில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக இந்தத் துயரமான படுகொலைச் சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என காவல்துறையினர் பலத்த சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (50). இவர் அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பக் கருத்து வேறுபாடு காரணமாக இளங்கோவனின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். இதனால், ஆசிரியர் இளங்கோவன் மேல்மலையனூர் அருகே உள்ள தனது வீட்டில் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

ஆசிரியர் பணியுடன் சேர்த்து, அவர் தனது பகுதிக்குட்பட்ட இடங்களில் பழைய இரும்பு வியாபாரம் மற்றும் வட்டித் தொழிலும் பகுதி நேரமாகச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இளங்கோவனை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் இன்று (ஜூன் 4) நேரில் வந்து பார்த்தபோது, வீடு பூட்டப்பட்ட நிலையில் உள்ளிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.

ஜன்னல் வழியே பார்த்த உறவினர்கள், இளங்கோவன் உள்ளே சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக உள்ளூர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.