நயனின் "டெஸ்ட்" படம் நேரடியாக ஓடிடி ரிலீஸ்..!

 
நயன்


 
தமிழ் திரையுலகில் நயன்தாரா, மாதவன் நடித்த டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் என தகவல்கள் வெளியான நிலையில்  இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா' உட்பட படங்களை தயாரித்த சசிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்து வருகிறார். மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உட்பட பலர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து விட்டது.

டெஸ்ட்

தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சசிகாந்த் தயாரித்த 'ஜகமே தந்திரம்' படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நயன்தாரா நடிக்கும் "டெஸ்ட்" படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!