20 நாட்களுக்கு ஜவுளி உற்பத்தி தொழில் நிறுத்தம்.. தொழிலாளர்கள் திடீர் அறிவிப்பு..!!

 
ஜவுளி உற்பத்தி தொழில்

மின்சார மானியம் ரத்து மற்றும் உற்பத்தி தேக்கம் உள்ளிட்டவைகளை கண்டித்து இன்று முதல் 20 நாட்களுக்கு திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். இந்நிலையில், மின் கட்டண உயர்வு, நிலை கட்டணம், மூலப்பொருள்கள் விலை உயர்வு, பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து துணி இறக்குமதி அதிகரித்துள்ளதால் உள்நாட்டுத் துணி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தது- ஜவுளி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி |  Textile manufacturers happy yarn price dropped

மற்ற மாநிலங்களில் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால், தமிழக துணி உற்பத்தியாளர்களால் போட்டிபோட்டு தொழில் செய்ய முடியவில்லை. தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் துணி ஏற்றுமதி செய்து வந்த நிலையில், உலக பொருளாதார மந்தம், உக்ரைன், இஸ்ரேல் போர்கள் காரணமாக ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

ஊரடங்கு, இ-பாஸ் கட்டுப்பாடுகளுக்கு இடையே ஆர்டர்களை பெறுவதில் பின்னலாடை  துறைக்கு சிக்கல்: தொழில் வளர்ச்சிக்கு மாற்று நடவடிக்கைகள் தேவை ...

எனவே, நவம்பர் 5 முதல் 25 ஆம் தேதி வரை துணி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி மின்சார மானியம் ரத்து மற்றும் உற்பத்தி தேக்கம் உள்ளிட்டவைகளை கண்டித்து திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணாக 20 நாட்களுக்கு இவ்விரு மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

From around the web