எம்.ஜி.ஆரின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடல் புகழ் நடிகை மெட்டா ரூங்ராட் காலமானார்!

 
mgr

 

எம்.ஜி.ஆர். இயக்கி, நடித்து 1973-ம் ஆண்டு வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்ராட் (83) காலமானார்.

தாய்லாந்து திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய இவர், 60 ஆண்டுகளுக்கும் மேலான கலைப்பயணத்தில் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். 180-க்கும் மேற்பட்ட படைப்புகளில் அவர் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ள அவர், ‘ஆசியாவின் கருப்பு முத்து’ என்றும் அழைக்கப்பட்டார்.

Entertainment World Shaken! Veteran Actress Metta Rungrat, 83, Dies at Home Amid Health Struggles

இந்த நிலையில், நவம்பர் 3-ம் தேதி பாங்காக்கில் உள்ள தனது வீட்டில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு அல்சைமர் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sad News: Renowned Senior Actress Metta Rungrat Passes Away at Home

எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் நினைவில் இடம்பிடித்த மெட்டா ரூங்ராட்டின் மறைவு, இரு நாட்டுத் திரைப்பட ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.