தை அமாவாசை... தமிழகம் முழுவதும் இருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இன்று தை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதைப் போலவே இராமேஸ்வரத்தில் இருந்தும் மறுமார்க்கமாக இன்று மாலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
உலக பிரசித்தி பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் அக்னி தீர்த்தம் கடலில் அமாவாசை நாட்களில் தங்களுடைய முன்னோர்களுடைய திதி, தர்ப்பணம் கொடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வரக்கூடிய முதல் 3 அமாவாசையில் ஒன்றான தை அமாவாசை இன்று ஜனவரி 29ம் தேதி புதன்கிழமை வருகிறது.
இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களுடைய முன்னோர்களுக்கு அக்னி தீர்த்தம் கடற்கரையில் குவிந்து திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் பிறகு ராமநாதசுவாமி கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்த கிணறுகளிலும் நீராடிவிட்டு ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டு செல்வர். இந்நிலையில் போக்குவரத்து துறையின் மூலம் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நேற்று ஜனவரி 28ம் தேதி சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
கிளாம்பாக்கம், சேலம், கோவை, பெங்களூருவில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. அதே போன்று இன்று ஜனவரி 29ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மறுமார்க்கமாக கிளாம்பாக்கம், சேலம், கோவை, பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கும், மறுமார்க்கமாக இன்று மாலை இராமேஸ்வரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.. இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!