தாராபுரம், மதுராந்தகத்தில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம், மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் தொடக்கம்!

 
தாய்மாமன் தங்க மோதிரம்

இடைத்தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் அரசு நலத்திட்டங்கள் மீண்டும் முழு வீச்சில் அமலுக்கு வந்துள்ளன.

பெண்கள் மகளிர் பேருந்து பிரியதர்ஷினி

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசின் சார்பில் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் இன்று முதல் இவ்விரு மாவட்டங்களிலும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இதற்கான பணிகளைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தனர்.

தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாகத் தற்காலிகமாகத் தடைபட்டிருந்த அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் இன்று முதல் மீண்டும் வழக்கம்போல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

இடைத்தேர்தல் முடிந்து மீண்டும் நலத்திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.