'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் நாளை தொடக்கம்... மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!

 
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார். இதற்காக மதுரை வரும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள உள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரசவ வார்டில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவிக்கும் இந்தச் சிறப்பான திட்டத்தை முதல்வர் விஜய் நாளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக அங்குள்ள 25 குழந்தைகளுக்கு அவர் தங்க மோதிரம் அணிவிக்க உள்ளார்.

தாய்மாமன் தங்க மோதிரம்

மதுரை வருகை தரும் அவர், உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து, அண்மையில் புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு, மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, பாதுகாப்புப் பணியில் மட்டும் சுமார் 4,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.