தைப்பூச சிறப்புக்கள், விரதமுறை, பலன்கள்..!

 
முருகன்

பூச நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்தது. மாதம் தோறும் பூச நட்சத்திரம் வரும் என்றாலும் தை மாததில் வரும் பூசம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்


இந்த நாளில் எப்படி விரதம் இருப்பது?

முருகன்
அதிகாலை எழுந்து வீடு சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி விரதம் முழுமையடைய பிரார்த்தனை செய்ய வேண்டும்.  காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து உபவாசம் இருக்கலாம். இயலாதவர்கள் காலை மதியம் இருவேளையும் பால், பழம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மாலையில் அருகில் முருகன் கோயிலில் வழிபாடு செய்யலாம். 
கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இதனால் கோவிலை 6 முறை வெளிப்பிரதட்சிணம் செய்யலாம். 
முருகனின் தீவிர  பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பர். மார்கழி  தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம்.  பார்வதி , முருகனுக்கு ஞானவேல் வழங்கிய தினம் இது தான்.

பழனி முருகன் கோவிலில் நாளை நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

அதனால் இந்நாளில் முருக வேலையும் சேர்த்து வழிபடுவது சிறப்பு. அதனை கொண்டே முருகன் சூரபத்மனை வதம் புரிந்தார். நாமும் முருக வழிபாடு செய்திட நம் வாழ்வில் துயரங்களையும் வதம் செய்து நன்னருள் புரிவார் என்பது ஐதிகம். தீய சக்திகள் நம்மை அண்டாது.  வறுமை நீங்கி செல்வ வளம் பெறலாம். குரு பகவானையும், சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுவது கூடுதல் சிறப்பான பலன்களை தரும்.தைப்பூச திருநாளில் முருகனையும், முருக வேலையும் வழிபடுவோம். அவன் அருள் பெறுவோம். 

From around the web