இருமுடி, தைப்பூசம் விழா வரை மேல்மருத்துவத்தூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும்... பக்தர்கள் வரவேற்பு!

 
 சிறப்பு ரயில்

 

இருமுடி மற்றும் தைப்பூசம் திருவிழாவையொட்டி தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் ஜனவரி 22 வரை இந்தச் சிறப்பு நிறுத்தம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்

அதன்படி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் 20683 எண் கொண்ட ரயில், 2027 ஜனவரி 3, 5, 7, 10, 12, 14, 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

சபரிமலை ரயில்

மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682), 2027 ஜனவரி 2, 3, 7, 9, 10, 14, 16, 17 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.