சேப்பாக்கத்தில் தல அஜீத்... விண்ணை பிளந்த ரசிகர்கள் கோஷம்!

தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளான அஜீத் ஷாலினி இருவரும் தங்களது 25 வது திருமண நாளை கொண்டாடி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இந்த வீடியோ வைரலான நிலையில் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை நடிகர் அஜித் குமார் குடும்பத்தினருடன் கண்டுரசித்தார். தல தல என கரகோஷத்தால் சேப்பாக்கம் மைதானமே அதிரத் தொடங்கியது.
பொதுவாகவே நடிகர் அஜித் பொது இடங்களில் கூட்டம் கூடும் இடங்களில் தலைகாட்ட மாட்டார். தற்போது பல வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக பொதுமக்கள் அதிகம் கூடும் ஐபிஎல் போட்டியை கண்டு களிக்க நேரில் வருகை தந்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியை குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். அப்போது மைதானத்தில் தல தல கோஷம் அதிர்ந்தது. ஏற்கனவே தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் செல்லமாக தல தோனி என அழைக்கும் நிலையில் பல வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்றழைக்கப்படும் அஜித்குமார் ஒரே இடத்தில் சங்கமித்ததால் மைதானத்தில் சத்தம் விண்ணை பிழந்தது.
THALA 😎💥✌️💥 #AjithKumar pic.twitter.com/h7CMgkTRLM
— AJITHKUMAR TEAM ONLINE🐉 (@AkTeamOnline) April 25, 2025
யார் தன்னை வம்படியாக அழைத்தாலும், தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும் அவற்றில் பல வருடங்களாக கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். அவருடன் மனைவி ஷாலினி, ஆத்விக், அனுஷ்கா, ரிச்சர்ட் ஆகியோரும் உடனிருந்தனர். பில்லா பட பாணியில் கருப்பு நிற கோட் சூட் அணிந்து ஸ்டைலாக மாஸாக அஜித்குமார் மைதானத்தில் என்ட்ரி கொடுத்தார். அஜித் குமார் வருகை தந்த சில நிமிடங்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி ஆர்த்தியோடு வந்திருந்தார். இரண்டரை நிமிட ஸ்ட்ராஜெடிக் டைம் அவுட்டில் அஜித்தை காண்பித்து கொண்டிருந்தனர். நடிகர் அஜித்தும் ரசிகர்களுக்காக கையை உயர்த்திக் காட்டினார்.
வரும் வாரத்தில் அஜித் உயரிய பத்ம பூஷண் விருதினை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் பெறுகிறார். கார் ரேஸிங்கில் மூன்று வெற்றி, குட் பேட் அக்லி வசூல் வேட்டை, பத்ம விபூஷண் விருது, 25வது திருமண ஆண்டு என அஜித்திற்கு முப்பெரும் விழாவுடன் அட்டகாசமாக தொடங்கியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!